பாபர் மசூதி வழக்கின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தவறானது! வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபீப் விமர்சனம்

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ.3 நவம்பர் 2019-இல் வழங்கப்பட்ட ராம ஜென்மபூமி – பாபர் மசூதி விவகாரத்திலான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு வரலாற்று ஆசிரியரின் கோணத்தில் “முற்றிலும் தவறானது” என்று புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபீப் தெரிவித்துள்ளார்.  ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் இக்கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் அதற்கு முன்பாக கோயில் இருந்தது என்பதற்கு எவ்வித வலுவான அல்லது உறுதியான ஆதாரமும் இல்லை என்று இர்பான் ஹபீப் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் முடிவு

போதிய தொல்பொருள் சான்றுகள் இல்லாதபோதிலும், மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததாக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித் துள்ளது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பாபர் மசூதி தொடர்பான இறுதித்தீர்ப்பில் எந்த நீதிபதியின் கையெப்பமும் இல்லை, அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் எழுதிய நூலில் பாபரி மசூதி தொடர்பான தீர்ப்பில் அப்போதைய பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வில் முக்கிய நபரான  எஸ் ஒய் சந்திரசூட் மீது சில கருத்துகளைக் கூறினார். பாபர் மசூதி இறுதித் தீர்ப்பை கிட்டத்தட்ட முழுமையாக அவரே எழுதினார் என்பதாகும். இந்த நிலையில் வரலாற்று பேராரிசியரின் இந்தக் கருத்து மீண்டும் பாபர் மசூதி தொடர்பான விவாதத்தை கிளப்பி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *