கோவை: ‘பெரியார் அறிவுலகம்’ பாராட்டு விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்போம்! தருமபுரி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

2 Min Read
- Advertisement -

தருமபுரி, நவ. 3- கடந்த 31.10.2026 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் மாலை 3 மணிக்கு திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் பீம.தமிழ்பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முனியப்பன் வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் இளைய.மாதன், பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், ப.க. மாவட்டத் தலைவர் க.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தின் நோக்கங்கள்

4.11.2026 கோவையில் நடைபெறும் திராவிட நாயகர் மேனாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா.

டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

விடுதலை சந்தா, இயக்க வளர்ச்சி

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்ல துரை தொடக்கவுரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் சிறந்த வழி காட்டுதல் உரையாற்றினார்.

தீர்மானங்கள்

4.11.2026 அன்று கோவையில் நடை பெறும் திராவிட நாயகருக்கு நடை பெறும் பாராட்டு விழாவிற்கு 30 தோழர்கள் செல்வ தென தீர்மானிக்கப்படுகிறது.

எதிர்வரும் 2.12.2026 அன்று ஆசிரியர் பிறந்த நாளுக்கு ஆசிரியர் அறிவிப்பின்படி விடுதலை சந்தா 100 வழங்குவதெனவும், மற்றும் 25 உண்மை, 25 பெரியார் பிஞ்சு சந்தா வழங்குவதெனவும் தீர்மானிக்கப்படுகிறது.

நம் இயக்கத் தோழர்கள் மீதான பொய் வழக்கைத் தலைமைக் கழகம் சார்பாக நீதிமன்றத்தில் சந்திப்பதென தீர்மானிக்கப்படு கிறது.

மேனாள் தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கி ணைந்த மாவட்டச் செயலாளர்களாக இருந்த பெ.மதிணியன் துணைவர் ம.தமிழ்ச்செல்வி கடந்த 27.10.2026 அன்று மறைந்தார். அவருக்கு தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக இரங்கல் தெரிவிக் கப்பட்டது.

மேலும் திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி வெளியூரில் இருந்த காரணத்தால் செல்பேசி வழியாக வழிகாட்டுதல் உரையும், விடுதலை சந்தா, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா வழங்கு வதென உரையாற்றினார்.

பங்கேற்ற தோழர்கள்

நகரத் தலைவர் கரு.பாலன், நகரத் தலைவர் ம.சுந்தரம், மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.பா.அருண்குமார், காமலாபுரம் மா.கிருட்டினன், மாவட்ட விவசாய அணி தலைவர் ஊ.காந்தி, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ம.சுதா, மாவட்ட கழகத் தலைவர் (அரூர்) அ.தமிழ்செல்வன், கிளை பொறுப்பாளர் அசோக், ஒன்றிய கழக செயலாளர் பி.மதிகண்ணன் ஆகியோர் இக் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *