மேற்கு வங்க அரசுப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபடத் தடை! அமைச்சரவை முடிவு

- Advertisement -

கொல்கத்தா, நவ. 1- மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் புதிதாகப் பணியில் சேரும் ஆசிரியர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், தேர்தலில் போட்டியிடுவதையும் தடை செய்யும் வகையில் புதிய விதிகளை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர் பாக முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக, மாநிலக் கல்வி அமைச்சர் தீபக் பர்மன் தெரிவித்தார்.

புதியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்

பள்ளிகள் தேர்வு ஆணையம்  மூலம் புதிதாகத் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் பொருந்தும். ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகிப்பவர்களுக்கும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பொறுப்புகூறல் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும்.

ஆசிரியர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையிலேயே ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்படும்.

பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் ஏற்கெனவே அமலில் உள்ள நடைமுறைகளை முன்மாதிரியாகக் கொண்டு, மேற்கு வங்கத்திலும் இப்புதிய விதிகள் விரைவில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் விவரங்களை திருத்த நவ. 14 வரை அவகாசம் நீட்டிப்பு

தேர்வுத்துறை எச்சரிக்கை!

சென்னை, நவ. 1- பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, பள்ளி மாணவர்களின் விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இதுவே இறுதி வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழில் உள்ள மாணவர் மற்றும் பெற்றோரின் பெயரைத் திருத்த விரும்பினால், கணினியில் ஏற்கெனவே உள்ள பெயரை முழுமையாக நீக்கிய பிறகே புதிய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

தேர்வுக் கட்டணம் செலுத்திய பிறகு மாணவர்களின் விவரங்களில் எந்தவொரு மாற்றமும் செய்ய இயலாது.

பள்ளிகள் சமர்ப்பிக்கும் பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்படும்.

எனவே, மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

பீகார் சட்ட மேலவைத் தேர்தல்

ஆர்.ஜே.டி. பலம் 17-ஆக உயர்வு; பா.ஜ.க.வின் பலம் சரிவு!

பாட்னா, நவ. 1- பீகார் சட்ட மேலவையில் காலியாக இருந்த 8 தொகுதிகளுக்கு (4 ஆசிரியர், 4 பட்டதாரி) நடைபெற்ற தேர்தலில் வெளியான முடிவுகளின்படி, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பலம் 17-ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், தனிப்பெரும் கட்சியான பா.ஜ.க.வின் பலம் 25இல் இருந்து 24-ஆகக் குறைந்துள்ளது.

போட்டியிட்ட 4 இடங்களில் ஆர்.ஜே.டி. 2 இடங்களில் வெற்றி பெற்றது. பாட்னா ஆசிரியர் தொகுதியில் 5 முறை மேலவை உறுப்பினராக இருந்த பாஜகவின் நவல் கிஷோர் யாதவை வீழ்த்தி ஆர்.ஜே.டி. வேட்பாளர் சஞ்சீவ் குமாரும், தர்பங்கா பட்டதாரி தொகுதியில் ஆர்.ஜே.டி.-யின் அனில் ஜாவும் வெற்றி பெற்றனர். போட்டியிட்ட 4 இடங்களில் பாஜக 2 இடங்களில் (கோசி பட்டதாரி, திர்ஹத் ஆசிரியர்) மட்டுமே வென்றது. ஆளும் கூட்டணியில் உள்ள அய்க்கிய ஜனதா தளம் பாட்னா தொகுதியை மட்டும் தக்கவைத்துக் கொண்டது.

காங்கிரஸ் போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வியடைந்தது. தர்பங்கா ஆசிரியர் தொகுதியை வென்று ‘ஜன்சுராஜ்’ கட்சி முதல்முறையாக மேலவையில் கணக்கைத் தொடங்கியுள்ளது. மீதமுள்ள 2 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

தற்போதைய மேலவை பலம் (மொத்த இடங்கள்: 75) பாஜக: 24  ஜே.டி.யு. 20 ஆர்.ஜே.டி: 17.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *