“ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

- Advertisement -

வாசிங்டன் அக்.31- ஈரானுடன் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத் தேர்தலை முன்னிட்டு கன்சாஸ் நகரின் கே.சி.எம்.ஓ. வானொலி நிலையத்துக்கு அளித்த பேட்டியில் அதிபர் டிரம்ப் கூறியதாவது:

“ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஆனால், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைத் தயாரிக்கவோ அல்லது கைப்பற்றவோ முடியாது என்பதற்கான உறுதியான உத்தரவாதம் அமெரிக்காவுக்குத் தேவை. ஈரானிடம் அணுஆயுதம் இல்லாத நிலை உறுதி செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முன்பாக ஈரான் மீது அமெரிக்கா புதிய ராணுவத் தாக்குதல்களை நடத்தாது என டிரம்ப் முன்னதாகத் தெரி வித்திருந்தார். எனினும், தேர்தல் முடிந்த உடனேயே ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல்களை நடத்த மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், கத்தார் பிரதமரின் மூத்த ஆலோசகர் தலைமை யிலான தூதுக்குழு நேற்று (30.10.2026) டெஹ்ரான் சென்றடைந்தது. அவர்கள் ஈரான் உயர் அதிகாரி களுடன் அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பொரு ளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்; அப்போதுதான் முறையான அமைதிப் பேச்சுவார்த்தை சாத் தியமாகும் என்று ஈரானின் உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமேனி மீண்டும் வலி யுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *