அலகாபாத் ஆக 18 ஒன்றியத்தில் மோடி அரசு வந்த பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியமானவர்களை அனைத்து துறைகளிலும் நுழையவிட்ட பிறகு சுதந்திர நாள் கொண்டாட்டம் என்பது அரசியல் பேசும் மேடையாக மாறிவிட்டது
குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் தன் வசப்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரே துணைவேந்தராக நியமிக்கப்பட்டி ருக்கிறார்.
அலகாபாத் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று மூவர்ணக்கொடியை ஏற்றிய அவர் பேசும் போது ‘‘நாட்டில் உயர் பதவியில் உள்ளவர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் இளைஞர்கள் நடத்தியப் போராட்டத்தில் பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது, மாணவர்கள் பிரதமர் குறித்துப் பேசும் போது மரியாதையாகப் பேசவேண்டும், இல்லை என்றால் அவர்களின் எதிர் காலம் குறித்து அவர்களின் பெற்றோர் கவலைப்படவேண்டி இருக்கும்’’ என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி பேசும் போது அலகாபாத் பல்கலைக் கழக துணைவேந்தரின் சுதந்திர நாள் உரை. மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் கொடுமைகளை அவரால் எண்ணி பார்க்க முடிய வில்லை. நாட்டின் பிரதமருக்கு எதிராக மாணவர்கள் பேசத் துணிவது குறித்து கவலை தெரிவித்துள்ளார். மாணவர்களை மிரட்டியுள்ளார்
கல்வி முறை முழுமையாக இந்த ஆர்.எஸ்.எஸ். பரப்புரையாளர்களின் கைகளில் வீழ்ந்துவிட்டது. இந்தியப் பல்கலைக்கழக வளாகங்கள் இந்த சங்கிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை, நம் கல்வி முறையை ஒருபோதும் சீரமைக்க முடியாது.”
