பாஜக மாநிலங்களவை உறுப்பினர் எல்அய்சி ஹவுசிங் பைனான்ஸில் ரூ.1322 கோடி கடன் மோசடி

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப். 06 ஜீ குழுமத்தின் நிறுவனர் சுபாஷ் சந்திரா பெரும் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளார். ஜீ குழுமம் சார்பில் வாங்கப்பட்ட ரூ.22,000 கோடி கடன் நிலுவையில் இருக்கும் நிலையில், தான் திவால் அடைந்துவிட்டதாக அறி வித்து, கடன் உத்தரவாதங்களுக்கு ரூ.6.25 கோடி செலுத்த அவர் முன் வந்தார்.

அதை தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. இதற்கு வங்கிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தை அடுத்து, தீர்ப்பாயம் தனது உத்தரவை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், ஜீ குழும நிறுவனங்களுக்கு, எல்அய்சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1,322 கோடி கடன் பெறுவதற்காக போலி சொத்து மதிப்பு சான்றிதழ்களை வழங்கியதாகக் கூறப்படும் வழக்கில், சுபாஷ் சந்திரா மற்றும் சில தனி நபர்கள் மீது சிபிஅய் வழக்குப் பதிவு செய்துள்ளது. அவரை தவிர, ஜீ குழுமத்தின் வசந்த் சாகர் பிராப்பர்டீஸ், அதன் இயக்குநர் பங்கஜ் சுரோலியா உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *