இனி எல்லாம் தனியார்மயம் தானோ? திருச்சி, திருப்பதி உள்ளிட்ட 11 விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு ஆலோசனை

2 Min Read
- Advertisement -

திருச்சி, அக். 30- திருச்சி, திருப்பதி உட்பட நாட்டில் உள்ள 11 விமான நிலை யங்களை 5 தொகுப்புகளாக பிரித்து தனியார் வசம் ஒப்படைப்பது குறித்த முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் டில்லியில் இன்று (அக்.30) நடைபெறுகிறது.

நாட்டில் அதிக வருவாய் மற்றும் போக்குவரத்து உள்ள ஒரு பெரிய விமான நிலையத்துடன், குறைந்த வருவாய் உள்ள ஒரு சிறிய விமான நிலையத்தை இணைத்து தனியார்வசம் (பொது-தனியார் கூட்டு முறையில்) ஒப்படைத்து உலகத் தரத்திலான வசதியை பெறுவதற்காக ‘பண்ட்லிங் மாடல்’ திட்டத்தை ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இதுவரை 14 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக் கப்பட்டு இயங்கி வருகின்றன.

அடுத்த கட்டமாக நாட்டில் உள்ள 11 விமான நிலையங்களை 5 தொகுப்புகளாக பிரித்து, அதாவது அமிர்தசரஸ் – காங்க்ரா, வாராணசி – கயா – குஷிநகர், புவனேஸ்வர் – ஹூப்ளி, ராய்பூர் – அவுரங்காபாத், திருச்சி – திருப்பதி ஆகிய விமானநிலையங்களை தனியாருக்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலையங்களை நவீனமயமாக் கவும், உள்கட்டமைப்பை பன்னாட்டு தரத்துக்கு உயர்த்தவும் இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின்கீழ் விமான நிலையத்தின் இயக்கம், மேலாண்மை, மேம்பாடு ஆகியவற்றை ஒப்பந்ததாரர் பராமரிக்க வேண்டும். இதில், பயணிகள் முனையம், நகர்ப்புறக் கட்டடங்களை உள்ளடக்கிய கட்டமைப்பு, எல்லைச்சுவர், வாகனங்கள், அலுவலகப் பொருட்கள், கணினி மென்பொருள் ஆகியவை அடங்கும். அதேவேளையில், வான் போக்கு வரத்து கோபுரம், தகவல் தொடர்பு, வழிநடத்தல், கண்காணிப்பு சேவைகளை இந்திய விமான நிலைய ஆணையம் தொடர்ந்து வழங்கும். மேலும், இந்திய விமான நிலைய ஆணைய சரக்கு தளவா டங்கள் மற்றும் இணை சேவைகள் நிறுவனம் சலுகையாளருடன் சேர்ந்து இயங்கும்.

திருச்சி – திருப்பதி உட்பட 11 விமான நிலையங்களை 5 தொகுப்புகளாக பிரித்து தனியாருக்கு வழங்குவது குறித்து சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் இன்று (அக்.30) நடைபெறுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *