‘நீட்’ முற்றிலும் தோல்வி மருத்துவ மாணவர் சேர்க்கை அதிகாரத்தை மாநில அரசிடமே ஒப்படைக்க வேண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

2 Min Read

சென்னை, ஜூலை 24– ‘நீட் தேர்வு தனது அனைத்து வாக்குறுதிகளிலும் முற்றிலுமாகத் தோற்றுவிட்டது. கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து மருத்துவ மாணவர் சேர்க்கை அதிகா ரத்தை மாநிலங்களிடமே ஒப்படைக்க வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் வெறும் ஒரு தேர்வின் நம்பகத்தன்மை சீர்குலைந்ததற்கான எதிர்வினை மட்டுமல்ல; தகுதி அடிப்படையிலானது என முன்னிறுத்தப்பட்ட ஓர் அமைப்பின் மீதான ஆழமான நம்பிக்கையிழப்பையே வெளிப்படுத்துகின்றன.

நீட்டுக்கு எதிராக முதன் முதலில் எச்சரிக்கைக் குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடுதான். நீட் அறிமுகப்படுத் தப்பட்ட போது ஒன்றிய அரசு, ‘பல நுழைவுத் தேர்வுகளை எழுதும் சுமை குறையும். கேப்பிடேஷன் கட்டணம் மற்றும் வணிகமயமாக்கல் ஒழியும், மருத்துவக் கல்வித் தரம் உயரும்’ என 3 முக்கிய வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், இந்த 3 வாக்குறுதிகளிலும் நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது. சமத்துவமின்மையைக் குறைப்பதற்குப் பதிலாக, கற்றலின் மய்யத்தைப் பள்ளிகளிலிருந்து பயிற்சி மய்யங்களுக்கு நீட் மாற்றிவிட்டது.

இதன்மூலம் கிராமப்புற, அரசுப் பள்ளி, முதல் தலைமுறை மற்றும் தாய்மொழி வழியில் பயிலும் மாண வர்கள் கடுமையாகப் பின்னடைவை சந்திக்கின்றனர். கேப்பிடேஷன் கட் டணத்துக்குப் பதிலாக, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பயிற்சி மய்யக் கட்டணம் அந்த இடத்தைப் பிடித்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தனியார் கல்லூரி இடங்களை நிரப்புவதற்காக, தகுதிக்கான பெர் சென்டைல் பலமுறை பூஜ்ஜியம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இது தகுதியை முன்னிறுத்தும் முறை அல்ல; வசதி படைத்தவர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முறையாகும்.

அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பள்ளிக் கல்வி மதிப்பெண்களைச் சமன்படுத்தும் முறையிலேயே சேர்க்கை நடை பெறுகிறது. நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைப்படி தமிழ்நாடு சட்டப்பேரவை நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது.

மருத்துவக் கல்லூரிகளை நிறுவி, நிதியளித்து பராமரிக்கும் மாநி லங்களுக்கு, மாணவர் சேர்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.

ஒன்றிய அரசு ஒற்றைத்துவ மனப்போக்கைக் கைவிட்டு, மாநிலங்கள் மற்றும் மாணவர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். மருத்துவக் கல்வியின் எதிர்காலம், நியாயமான, கூட்டாட்சித்தத்துவத்தை மதிக்கும் அணுகுமுறையையே கோருகிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *