கிருஷ்ணா, கோதாவரி ஆழ்கடல் பகுதிக்கு அருகில் புதிய இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு! ஆயில் இந்தியா நிறுவனம் சாதனை

1 Min Read
- Advertisement -

அய்தராபாத், அக். 25- இந்தியாவின் முன்னணிப் பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், கிருஷ்ணா கோதாவரி ஆழ்கடல் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஆழமற்ற நீர்வெளியில் புதிய இயற்கை எரிவாயு இருப்பைக் கண்டறிந்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஏலச் சுற்றில் இந்நிறுவனம் கைப்பற்றிய ஆழமற்ற கடல் பகுதியில்தான் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 16-ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட தொடர் சோதனைகளின் போது, ‘கோதாவரி-1’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மதிப்பீட்டுக் கிணற்றில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் எரிவாயு வெளிப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் கன மீட்டர் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

உள்நாட்டுத் தேவ பூர்த்தி

இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இந்த புதிய எரிவாயு கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்.

இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் அளவைக் குறைத்து நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும்.

தற்போது ஆயில் இந்தியா நிறுவனம் இந்த கிணற்றில் அடுத்த கட்ட சோதனைகள் மற்றும் மேற்கண்ட பகுதியின் வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *