தேர்தல் ஆணையத்துக்குள் இருந்த கருத்து முரண்பாடுகள் தகவல் அறியும் உரிமை மூலம் அம்பலம்!

3 Min Read
- Advertisement -

தேர்தல் ஆணையர்களின் புகார் கடிதத்தைத்
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய அமைச்சரவைச் செயலாளர்!

புதுடில்லி, அக்.24  இந்தியத் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் அமைச்சரவைச் செயலாளர் (கேபினெட் செக்ரட்டரி) டி.வி.சோமநாதனுக்கு எழுதிய கடிதங்களை, ஒன்றிய அரசின் அமைச்சரவைச் செயலகம் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு அனுப்பியது  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.அய்.) மூலம் தெரியவந்துள்ளது.

கொமடோர் லோகேஷ் பத்ரா என்பவர் அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செப்டம்பர் 24 அன்று தனது  தகவல் அறியும் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார். அவர் கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதில் அளித்து அமைச்சரவை செயலகத்தின் தகவல் அலுவலகம் தந்திருக்கும் தகவல்கள், தன்னிச்சையான நடவடிக்கைகளை ஒரு சார்பாக எடுத்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களுக்கு இடை யில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மனீஷ் கார்க், தேர்தல் ஆணையர்களுடன் கலந்தாலோசிக்காமல் பணி ஒதுக்கீட்டு உத்தரவைப் பிறப்பித்ததாகத் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சந்துவும், விவேக் ஜோஷியும் ஜூலை 29 தேதியிட்டு தனித்தனியாக எழுதியிருந்த கடிதங்களில் குற்றம் சாட்டியிருந்தனர்.

அக் கடிதங்களை, அமைச்சரவைச் செயலகம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு அனுப்பியது டன், அதைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கடிதத்தின் நகலைத் தலைமைத் தேர்தல் ஆணை யர் ஞானேஷ் குமாரின் அலுவலகத்திற்கும் அனுப்பி யுள்ளது.

ஆணையர்களின் கடிதங்கள் அவர்களின் தனிப்பட்ட தகுதியில் எழுதப்பட்டவை என்றும், அவை இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து வந்த முறையான தகவல் அல்ல என்றும் முடிவு செய்யப்பட்டு,  அமைச்சரவைச் செயலாளர் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. அந்த இரண்டு ஆணையர்களுக்கும், அவர்களின் கடிதங்கள் பெறப்பட்டதற்கான ஒப்புகை மட்டுமே அனுப்பப்பட்டது.

சந்துவின் கடிதத்துடன், ஜூலை 28 அன்று துணைத் தேர்தல் ஆணையர் கார்க் பிறப்பித்த உத்தரவின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவில், தனக்கும், தகவல் தொழில்நுட்பத் துறை தலைமை இயக்குநர் சீமா கன்னா மற்றும் துணைத் தேர்தல் ஆணையர் சஞ்சய் குமார் உள்ளிட்ட பிற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் பணிகள் ஒதுக்கப்பட்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதன்படி, துணைத் தேர்தல் ஆணையர் (நிர்வாகம்) பொறுப்பைக் கவனிக்கும் ‘இணைப்பு அதிகாரி’யாக பதவியேற்ற மனிஷ் கார்க், தனக்கு இணையான மற்றும் மூத்த அதிகாரிகளின் பணி ஒதுக்கீடு குறித்து, தேர்தல் ஆணையத்துடனோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனோ எந்த ஆலோசனையும் நடத்தாமல் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியோ அல்லது ஆலோசனையோ இன்றி இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று அனைத்து அதிகாரிகளுக்கும் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பலமுறை அறிவுறுத்தப்பட்டிருந்தும், அவர் இவ்வாறு செயல் பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர்கள் தெரிவித்து உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கோப்புகளைக் கன்னாவின் கீழ் பணிப் பகிர்வு செய்யும் முறையை மாற்றுவதற்கான கார்க்கின் முடிவு குறித்து ஆணையர்கள் ஏற்கெனவே கவலை கொண்டிருந்தனர். முன்னதாக, அந்தக் கோப்புகள் ஞானேஷ் குமாருக்கும் சென்றிருந்தன. இந்த சீமா கன்னாவும், அவரது தலைமையின் கீழான தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையும் தற்போது ஒரு சர்ச்சையின் மய்யப் புள்ளியாக உள்ளன.

சீமா கன்னா அறிமுகப்படுத்திய புதிய தகவல் தொழில்நுட்ப முறை தான், வாக்காளர் பட்டியலைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு அந்தத் தரவுத்தளத்தை அணுகும் வாய்ப்பையே மறுத்துவிட்டது.

மேலும், தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், ஜோஷி மற்றும் சந்து ஆகியோர் தலைமைத் தேர்தல் ஆணையர் குமாருடன் பலமுறை முரண்பட்டதாகவும் அந்தப் புலனாய்வு தெரிவித்தது. இதனை மறுத்துள்ள தேர்தல் ஆணையம், அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவோ அல்லது விதிகளுக்கு உட்பட்டு பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையிலோ எடுக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமித்த நிலையில் எடுக்கப்பட்டன என்று குற்றச்சாட்டுகளுக்கு ஆணையம் பதில் அளித்திருந்த நிலையில், அதி காரத்தை மீறி ஒரு துணை ஆணையர் செயல்பட்டதும், தேர்தல் ஆணையத்தின் தரவுத் தளத்தின் நிர்வாகம் குறித்து தேர்தல் ஆணையர்களின் கருத்துகளுக்குள் முரண்பாடுகள் இருந்ததும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தற்போது கிடைத்துள்ள ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *