சாமியார் ஆளும் மாநிலத்தில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : அமைதி காக்கும் மாநில அரசு

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சித்ரகூட், ஜூலை 26 உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற 19 வயது நீட் தேர்வு மாணவி, மூன்று பேரடங்கிய கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய் யப்பட்ட நிகழ்வு பெரும் பர பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி உத்தரப் பிரதேச மாநிலம் சித்ர கூட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு, அம்மாணவி தனது 17 வயது உறவினருடன் அப்பகுதியில் சுற்றுலா சென் றுள்ளார். அவர்களைப் பின் தொடர்ந்து வந்த மூன்று பேரடங்கிய கும்பல் காட்டில் வைத்து அவர்களை வழி மறித் துத் தாக்கி மாணவியை அக் கும்பல் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
தகவலறிந்து நிகழ்வு இடத் திற்கு விரைந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு மருத்துவப் பரிசோத னைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொடூரம் குறித்து வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளதாகச் மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் அருண் குமார் சிங் தெரி வித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சுற்றுலாத் தலத்தில் மாணவிக்கு நடந்த இந்தச் கொடூர நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமியார் ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது தொடர்ந்து வரும் செய்திகள் மூலம் தெரியவந்த போதிலும் அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதால் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *