
வல்லம், தஞ்.25- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கட்டட பொறியியல் துறையின் நான்காம் ஆண்டு பயிலும் மாணவரும், பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவருமான ஜி.அரி கிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 2026 க்கான சிலம்பம் போட்டியில் (SDAT) கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 19.10.2026 முதல் 22.10.2026 வரை நடைபெற்ற இப்போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்று ரூ.1,00,000/- த்திற்கான பரிசுத்தொகையினை பெற்றுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சிலம்பம் விளையாட்டில் அவர் தொடர்ந்து சிறப்பான சாதனைகளைப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டு தங்கம் பதக்கம்
2025ஆம் ஆண்டு வெள்ளிப் பதக்கம்
2026ஆம் ஆண்டு தங்கப் பதக்கம்
அவரது மகத்தான இந்த சாதனை அவருடைய அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விளையாட்டுத் திறனைப் பறைசாற்றுகிறது. இச்சிறப்பான சாதனையைப் படைத்த ஜி.அரிகிருஷ்ணனை பெரியார் மணியம்மை அறிவியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா ஆகியோர் பெருமையுடன் பாராட்டியதோடு மாணவர் எதிர்காலத் திலும் பல்வேறு வெற்றிகளைப் பெற்று தொடர்ந்து சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
இம்மாணவருக்கு பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் பேராசிரியர் டி.ரமேஷ் அவர்கள் ஒத்துழைப்பினை நல்கினார்.
