திருச்சி, செப்.27- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலத் திறன் மேம்பாடு மற்றும் அழகிய கையெழுத்துப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு செய்யப்பட்டது.
திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் மொழி ஆளுமை மற்றும் எழுத்தாற்றலை வளர்க்கும் நோக்கில், ‘ஏபிசி டீச்’ அமைப்புடன் இணைந்து சிறப்புப் போட்டிகள் நடைபெற்றன.
இப்பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவி களுக்காக ‘ஆங்கிலத் திறன் மேம்பாட்டுப் போட்டிகள்’ மற்றும் ‘கையெழுத்துப் பயிற்சிப் போட்டிகள்’ மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன.
இந்நிகழ்விற்குப் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா தலைமை ஏற்றுச் சிறப்பித்தார். ‘ஏபிசி டீச்’ அமைப்பின் நிறுவனர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இப்போட்டிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றுத் தங்களது மொழித்திறன் மற்றும் அழகிய கையெழுத்துத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா கேடயங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்துப் பாராட்டினார்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடு களையும் பள்ளியின் ஆங்கிலத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆசிரியர்கள் தேவதர்ஷினி, நஜீபா பேகம் மற்றும் கையெழுத்துப் பயிற்சி ஆசிரியர்கள் செல்வி.பவானி, செல்வி.சந்தியா ஆகியோர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
