பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இணை துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மல்லிகா மற்றும் மாணவர்கள் புதிய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
- பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா
- பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெரியார் பிறந்தநாள் விழா
பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சரியாக பகல் 1:00 மணியளவில் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியாரின் படத்திற்கு பள்ளி முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவர்கள் அனைவரும் தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு முன்பு நின்று பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் பாடி வாழ்த்தி மகிழ்ந்தனர். இறுதியாக மாணவர்களுக்கும் பணிபுரியும் அனைவருக்கும் பள்ளி முதல்வர் கடலை மிட்டாய் வழங்கி பெரியாரின் பிறந்த நாள் விழாவை சிறப்பித்தார்.
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரியார் பள்ளியின் முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அனைவரும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதி மொழியை ஏற்றனர். அதனைத் தொடர்ந்து பெரியார் பள்ளியில் பெரியாரின் ஒளிப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெரியார் பிறந்தநாள் விழா

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்தநாள் விழா திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு தலைமையாசிரியை, ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவியர்கள் ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவரும் சமூக நீதி நாள் (17.09.2026) உறுதிமொழியை சிறப்புடன் ஏற்றனர்.
