புதுடில்லி, ஆக.21 மகாராட் டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலை மையகத்தில் விஜயதசமி விழா நேற்று (20.10.2026) நடைபெற்றது.
இதில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய மோகன் பாகவத், இந்தியாவில் தற்போது எஸ்.அய்.ஆர் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் குறித்து கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
குறிப்பாக, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அந்நிய சக்திகள் சதித் திட்டம் தீட்டி வருவதாகவும், பதவி ஆசை கொண்ட சில அரசியல் தலைவர்கள் துணை நிற்பதாகவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தச்சூழலில் தான், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கடுமை யாக விமர்சித்து மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், பதிவிட் டுள்ளார். அந்தப் பதிவில், “ஆர்.எஸ்.எஸ் என்பது முற்றிலும் ஆண்களை மட்டுமே கொண்ட, அரசியலமைப்புக்கு எதிரான ஒரு வழிபாட்டுக்குழு. பெண்களை ஆண்களின் உடைமை என்று அவர்கள் நம்புகிறார்கள். நான் சிவன் மற்றும் சக்தியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். அதனால்தான் அவர்களுடன் போராடுவது எனக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் அழகிய விஷயம் என்னவென்றால், அவர்களுடைய ‘சொந்த’ பெண் களில் பலரும் என் பக்கமே இருக்கிறார்கள்” எனத் தெரிவித் துள்ளார்.
எனினும், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் விஜயதசமி பேச்சுக்கு பதிலடியா? என்பது குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
