அரசு குழுக்கள், சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடில்லி, மே 22- அரசு குழுக்கள் மற்றும் சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மனு

‘லட்லி அறக்கட்டளை’ சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

“நாட்டின் சட்டத் துறையில் பாலின சமத்துவத்திற்கான அரசமைப்பு உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், ஆழமான பாலின ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது. அரசு குழுக்கள் மற்றும் முக்கிய சட்டப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது.

இதுவரை இந்தியாவின் ‘அட்டர்னி ஜெனரல்’ அல்லது ‘சொலிசிட்டர் ஜெனரல்’ ஆகிய உயர் பதவிகளில் ஒரு பெண் வழக்குரைஞர் கூட நியமிக்கப் படவில்லை. அதேபோல், பல்வேறு உயர்நீதிமன்றங்களில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக பெண்கள் யாரும் பணியாற்ற வில்லை.

எனவே, உச்சநீதிமன்ற குழுக்கள் முதல் உள்ளூர் சட்ட உதவி குழுக்கள் வரை, அனைத்து அரசு குழுக்கள் மற்றும் சட்டப் பதவிகளில் பெண் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்சம் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்.”

உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிக்கை

இந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி கள் ஜயமால்ய பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவிக்கை அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *