தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை, காரைக்குடி (கழக) மாவட்டங்கள் ஒருங்கிணைந்து நடத்திய பேச்சு – ஓவியப் போட்டிகள்

5 Min Read
- Advertisement -

காரைக்குடி, அக். 20- சிவகங்கை, காரைக்குடி (கழக) மாவட்டங்கள் இணைந்து நடத்திய பகுத்தறிவுப் பகலவன், தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும், பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும் 18.10.2026, அன்று காலை 10.00 மணியளவில், காரைக்குடி குறள் அரங்கில் பகுத்தறிவாளர் கழக காரைக்குடி (கழக) மாவட்டச் செயலாளர் ந.செல்வராசன், மாவட்டத் துணைத் தலைவர் முனைவர் செ. கோபால்சாமி, மாவட்டத் துணைச் செயலாளர் இரா. முத்துலெட்சுமி, சிவகங்கை மாவட்டத் தலைவர் சு.இராசாங்கம், மாவட்டச் செயலாளர் வைகை பிரபாகர் ஆகியோர் முன்னிலையில், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார் ஒருங்கிணைப்பில் “மாவட்டத்தில் எவ்வாண்டும் இல்லாத சிறப்பு இவ்வாண்டு” என கழகத் கள் பாராட்டும் வகையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பேச்சுப் போட்டி

கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டியில் வழக்கம் போல் இவ்வாண்டும் மாணவிகளே அதிக அளவில் பங்கேற்றனர். ஒவ்வொருவரின் பேச்சும், தனித்துவமாக, கருத்தாழம் மிக்கதாக அமைந்தது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்போட்டியில், நாச்சியப்பா சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலூர் கி. லெனின் குமார் முதலிடத்தையும், வேளாண்மைக் கல்லூரி (மகளிர்) ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு வே. சகுந்தலா இரண்டாமிடத்தையும்,  விவேகானந்தா கல்வியியல் கல்லூரி, கும்மங்குடி, திருப்பத்தூர் இரா. மங்கையற்கரசி மூன்றாமிடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

ஓவியப் போட்டி

பெரியாரின் மேற்கோள்களோடு, பென்சில் ஆர்ட், கலர் ஆர்ட் என பெரியாரின் கொள்கைகளை கைவண்ணத்தில் காட்டிய மாணவர்களின் படைப்புகள், அனைவருக்கும் வியப்பளித்தன. முதல் முயற்சி முத்தாய்ப்பாய் அமைந்ததே நிகழ்வின் சிறப்பானது.

பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியானது இரு பிரிவுகளாக நடைபெற்றது.

10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடைபெற்ற ஓவியப் போட்டியில் ப. சிறீ. விக்னேஷ்வர், (அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி, காரைக்குடி) முதலிடத்தையும், ச. கேஷிகா (சிதம்பரம் செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கோட்டையூர்), இரண்டாம் இடத்தையும், ச.கெரின் ஜென்சன் (தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளி, தேவகோட்டை) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் மு. குகன், (தி லீடர்ஸ் அகாடமி, சூரக்குடி) முதலிடத்தையும், அ. மதியழகன் (தே பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை) இரண்டாமிடத்தையும் ச. சஷ்டிகா, (மகரிஷி வித்யா மந்திர், காரைக்குடி) மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பணப்பரிசோடு வெற்றிச் சான்றிதழும், புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டன. பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

நடைபெற்ற இப்போட்டிகளுக்கு நடுவர்களாக முனைவர் கு. இரமேசு குமார் (உதவி பேராசிரியர் ஊரக மற்றும் பொருளாதார துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி), முனைவர் ச. கவுரி சங்கர் (உதவி பேராசிரியர், உயிர் தொழில் நுட்பவியல் துறை, அழகப்பா பல்கலை, காரைக்குடி), முனைவர் இரா. சதீஸ்குமார் (கவுரவ விரிவுரையாளர், பொருளியல் துறை, அரசு கலைக் கல்லூரி, பரமக்குடி), முனைவர் பா.தீபாகர் (ஓவிய ஆசிரியர், டெசின் ஓவியப் பள்ளி, தேவகோட்டை), முனைவர் பா.மெய்யம்மா (டெசின் அகடமி மேலாளர், காரைக்குடி) ஆகியோர் மாண்பு மாறாமல் நடுநிலைமையோடு தீர்ப்புகளை வழங்கி பெருமை சேர்த்தார்கள்.

நடுவர்களுக்கும், வருகை தந்த பயிற்றுநர்களுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டதோடு, புத்தகப் பரிசும் வழங்கப்பட்டது.

தொடர் விடுமுறைக் காலத்திலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். புத்தெழுச்சியோடு நடைபெற்ற

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொல் நடைக் குழுவின் நிறுவனர் புலவர் காளிராசா, இளம் பேச்சாளர் காரைக்குடி நவீன், காரைக்குடி நகரத் கழகத் தோழர்கள் மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை, மாவட்டச் செயலாளர் சி. செல்வமணி, காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன், தேவகோட்டை நகரத் தலைவர் வீ. முருகப்பன் மற்றும் பெற்றோர்களும், பயிற்றுநர்களும் கலந்து கொண்டனர். விழாவானது நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

போட்டிக்கான பரிசுத் தொகைகளை வழங்கியவர்கள்….

முதல் பரிசு ரூ. 2500 – சு. ராசாங்கம், மாவட்ட ப.க. தலைவர், சிவகங்கை. மூன்றாம் பரிசு ரூ. 1500 வைகை பிரபாகர், மாவட்டச் செயலாளர், பக, சிவகங்கை

ஓவியப் போட்டி

10 முதல் 12-ஆம் வகுப்பு

முதல் பரிசு ரூ. 2000 ம.கு வைகறை, மாவட்ட கழகத் தலைவர், காரைக்குடி – இரண்டாம் பரிசு ரூ. 1500
சி.செல்வமணி, மாவட்டச் செயலாளர், காரைக்குடி – மூன்றாம் பரிசு ரூ. 1000 த. புகழேந்தி, பக, சிவகங்கை

6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை

முதல் பரிசு ரூ. 1500 –  இரா. அழகு சுந்தரி, காரைக்குடி – இரண்டாம் பரிசு ரூ. 1000 – ரவீந்திரன் கல்லல் – மூன்றாம் பரிசு ரூ. 500 –  இரா. அழகு சுந்தரி, காரைக்குடி

நன்கொடை வழங்கியவர்கள்…

அ. அரவரசன், மாவட்டத் துணைத் தலைவர், பக – ரூ. 1000 –  முனைவர் செ. கோபால் சாமி, மாவட்ட துணைத் தலைவர், பக – ரூ. 1000 – கோவிந்தராசன், மாவட்ட துணைச் செயலாளர், பக – ரூ. 500 – வெங்கடேசன், காரைக்குடி – ரூ. 1000 – சங்குநாதன், கல்லல் – ரூ. 500 – ராசாராம், மாவட்டச் செயலாளர், – ரூ. 1000 – வீ. முருகப்பன், தேவகோட்டை நகரத் தலைவர், திக – ரூ. 500 – ந. ஜெகதீசன், காரைக்குடி மாநாகரத் தலைவர் – ரூ. 1000 – சாமி திராவிட மணி, மாவட்டக் காப்பாளர், – 1000 – அனந்தவேல், மாவட்டத் தலைவர், சிவகங்கை – ரூ. 1000 –

அனைத்துச் சான்றிதழ்களையும் வழங்கியவர்  இரா. முத்துலெட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர், பக – புத்தகப் பரிசுகள், எழுது பொருட்கள், ஒ. முத்துக் குமார், மாநில அமைப்பாளர், பக. – தேநீர், வடை, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இதர செலவினங்கள் ந.செல்வராசன், மாவட்டச் செயலாளர், ப.க.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *