தென்காசி, அக். 20– தென்காசியில் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நேற்று முன்தினம் (18.10.2026) அளித்த பேட்டி:
கடந்த 2007ஆம் ஆண்டு கலைஞரால் 3.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. மதம் மாறிய இஸ்லாமியர்கள் இதில் பயன்பெற முடியாமல் நீதிமன்றத்தை நாடினர். 2024 மார்ச் 9ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மதம் மாறியவர்களையும் இதில் சேர்த்துக் கொள்ள ஆணை யிடப்பட்டிருந்தது.
அந்த ஆணையைத்தான் உச்சநீதிமன்றம் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. மிக விரைவில் சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடி மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். மேல்முறையீடு அல்லது புதிய ஒரு சட்ட திருத்தத்தை விரைவில் செய்ய இருக்கிறோம்.
இதற்கான முறையான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும். பல ஆண்டுகளாக விசாரணை இன்றி சிறையில் இருந்து வரும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதனிடையே 2 நாள்களுக்கு முன்பு பரோலில் இதுவரை 6 பேர் வந்திருக்கின்றனர். அது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
