சென்னை, ஏப்.29 தமிழ்நாட்டில் ‘அக்னி நட்சத்திரம்’ தொடங்குவதற்கு முன்பாகவே பல மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் நாளை மறுநாள் (1.5.2026) முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் கொளுத்தும். சென்னையில் மே 5 ஆம் தேதிக்கு பிறகு, வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறையும்.
தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் வரும் நாட்களில் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

