சென்னையில் உயரும் காய்ச்சல் பாதிப்பு! முகக் கவசம் கட்டாயம்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.17- தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சுவாச பாதிப்புகளான ‘இன்ப்ளுயன்ஸா ஏ’ வகை காய்ச்சல், ‘அடினோ வைரஸ்’, ஆர்.எஸ்.வி. எனும் ‘ரெஸ்பிரேட்டரி சிண்ஸிடியல் வைரஸ்’, ‘கரோனா வைரஸ்’, ‘சின்னம்மை வைரஸ்’, ‘கூகைக்கட்டு அம்மை வைரஸ்’, ‘மீசில்ஸ் வைரஸ்’ ஆகியவை அதிக அளவில் பரவி வருகின்றன.

2 லட்சம் பேருக்கு பாதிப்பு அதேபோல், குழந்தைகளுக்கு கை, கால், வாய் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது மழைப் பொழிவு காரணமாக டெங்கு பாதிப்பும் பரவலாக உள்ளது. இதுபோன்று பல்வகை காய்ச்சல்களால் தற்போது, 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு வழக்கத்தை விட சற்று அதிகரித்துள்ளது. பலருக்கு கடுமையான தலைவலி, தொண்டைவலி, மூட்டுவலி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் பாதிப்புகளும் ஏற்படுகிறது.

தற்போது பரவும் காய்ச்சல், பலருக்கு ஒரு வாரத்தில் குணமடைந்தாலும் இணை நோயாளிகள், கர்ப்பிணி, முதியோர், குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். வைரஸ் பாதிப்புகள் அறிவிக்கை செய்யப்படாத காய்ச்சல் என்பதால், எவ்வளவு பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து பெரிதாக கணக்கில் எடுத்து கொள்வதில்லை.

பொது இடங்களில்
முகக் கவசம் கட்டாயம்

அதனால், மக்கள் முன்னெச்சரிக்கை யுடன் இருப்பது அவசியம். பொது இடங்களுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அத்துடன், அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.

ஒரு வகுப்பறையில் ஒரு சில மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்த வகுப்பறை, கழிப்பறை என மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.

சில பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் எனப் பெற்றோருக்கு அறிவுறுத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *