மோசமான வானிலை மைசூரு தசரா சிறப்பு விமான சாகசங்கள் ரத்து!

2 Min Read
- Advertisement -

மைசூரு, அக்.20- மைசூரு தசரா விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான விமான சாகச நிகழ்ச்சி, மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால், நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் வந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் ஏமாற்றமடைந்தனர்.

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கும். சுற்றுலாப் பயணிகளுக்கும் கண்கவர் விருந்தாக அமையும் வகையில், அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய 2 நாட்கள் மாபெரும் விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதல் நாள் விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க மைசூருவில் உள்ள பன்னிமண்டபம் தீ பந்து விளையாட்டு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (19.10.2026) ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். நாட்டின் பெருமைமிக்க சூர்யகிரண் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகசங்களை நேரில் காண பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருந்தனர். 18.10.2026 அன்று இரவு முழுவதும் அப்பகுதியில் பரவலாக மழை பெய்திருந்தது. இதன் காரணமாக, நேற்று காலை முதலே வானம் முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து கடும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எந்த நேரத்திலும் மீண்டும் மழை பெய்யக்கூடும் என்ற சூழல் நிலவியதுடன், விமான ஓட்டிகளுக்கு பார்வைத்திறன் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு திட்ட மிடப்பட்ட சாகசங்கள் உடனடியாக மாற்றியமைக்கப்பட்டன. சூர்யகிரண் விமானங்கள் 3 முறை மட்டுமே வானில் பறந்து சாகசங்களை செய்துவிட்டு திரும்பின. அதனைத் தொடர்ந்து நடத்தப்படவிருந்த ஹெலிகாப்டர்களின் சாகச காட்சிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.

விமான சாகச நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், மைதானத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஏமாற்றத்துடன் அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். இந்த நிகழ்வு குறித்து தசரா கமிட்டி அதிகாரிகள் கூறுகையில், “வானிலை சீராக இல்லாததாலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இன்று வானிலை எப்படி இருக்கிறது என்பதை வானிலை ஆய்வு மய்ய அறிக்கையின் மூலம் தெரிந்து கொண்டு. அதற்கேற்ப விமான சாகச நிகழ்ச்சி நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *