சாதனைப் படைத்த இளம் தடகள வீராங்கனை! குடியரசு நாள் விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி

- Advertisement -

திருச்சி, அக்.17- பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட 2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான பாரதியார் மற்றும் குடியரசு நாள் வருவாய் மாவட்ட அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில், திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி எஸ்.பி. ரிதன்யா  தடகளப் போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளார்.

திருச்சி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டி களில், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற மாணவி ரிதன்யா, உயரம் தாண்டுதல்  (High Jump) போட்டியில் 1.40 மீட்டர் உயரம் தாண்டி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாவட்ட அளவில் தனது திறமையை நிரூபித்து, பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ள இளம் வீராங்கனை ரிதன்யாவிற்கும் அவருக்குப் பயிற்சி வழங்கிய பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள்  கோகுல் மற்றும்  சவுமியா ஆகியோருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளித் தாளாளர், முதல்வர்,ஆசிரியர்கள், மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் தங்களது பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *