கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.10.2026

3 Min Read
- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* உச்சநீதிமன்றம் அதிரடி: எஸ்.அய்.ஆர். விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தாக்கீது – “நீதித்துறையை யாரும் மிரட்ட முடியாது!” வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தால் பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு; நீதிமன்ற வளாகத்தில் போராட்டங்களுக்கு முழுத் தடை கோரிய மனுவையும் உச்சநீதிமன்றம் விசாரித்தது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* “மற்ற மதத்தினர் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்க முடியாதா?” – தலையங்கம் எழுப்பும் முக்கியக் கேள்வி! மதம் மாறியதால் மட்டும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு உரிமையை இழக்க வேண்டுமா என்ற கேள்வியைத் தலையங்கம் எழுப்புகிறது; மதத்தைப் பொருட்படுத்தாமல் சமூகத்தில் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என டெக்கான் கிரானிக்கல் தலையங்கம் வலியுறுத்துகிறது.

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாரத் டைனமிக்ஸ் நிறுவன முன்னாள் தலைவரின் குடும்ப நிறுவனத்துக்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணை பாகம் தயாரிக்க ஒப்பந்தம்! ‘அவசரம்’ எனக் காரணம் காட்டி, அய்தராபாத்தைச் சேர்ந்த பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனம், போட்டியின்றி ஒற்றை ஒப்பந்தப்புள்ளி முறையில் ஆப்டிகல் சைட்களை வழங்கும் ஒப்பந்தத்தைப் பெற்றது. தொழில்நுட்பத் தகுதியைப் பெற்ற அந்நிறுவனம் ரூ.56.8 கோடிக்கு விலைப்புள்ளி அளித்துள்ள நிலையில், நிதி மதிப்பீடு நடைபெறுகிறது. ஓய்வுபெற்ற அதன் முன்னாள் தலைவர் சித்தார்த் மிஸ்ராவும் அவரது மனைவியும் தொடங்கிய இந்த நிறுவனத்தில், தற்போது மிஸ்ராவின் மனைவி ஷாம்பவி மிஸ்ரா 95% பங்குகளை வைத்துள்ளார்.

தி இந்து:

* “இந்து சமூக அமைப்பில் இருந்து இந்து அல்லாத சமூக அமைப்புக்கு மதம் மாறிய ஒருவர், மதமாற்றத்திற்கு முந்தைய சமூக பின்தங்கிய நிலையை காரணம் காட்டி மட்டும், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16(4)இன் கீழ் இடஒதுக்கீடு பலன்களை கோர முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மத மாற்றத்திற்கு பிறகு ஜாதி அடையாளம் மாறாத தனிப்பட்ட பண்பாகக் கருதப்பட முடியாது என்றும் தெரிவித்தது.

தி டெலிகிராப்:

* “இது தேர்தல் தில்லுமுல்லு இல்லையென்றால் வேறென்ன?” – 13 கோடி வாக்காளர்கள் நீக்கம் குறித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அபிஜித் தீப்கே  கடும் விமர்சனம்! 2% வாக்குகள் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் நிலையில், 13 கோடி வாக்குகள் நீக்கப்படுவது என்ன நியாயம் என அவர் கேள்வி எழுப்பினார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரும் போராட்டங்களை தடுக்க, டில்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு.

* மோடி அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்பு (VB-G RAM) சட்டம்: தொழில்நுட்பத்தின் பெயரில் ஏழைகள் விலக்கப்படுகின்றனர் – மோடி அரசு மீது காங்கிரஸ் தாக்கு! மோடி அரசு நாடாளுமன்றத்தில் புதிய ஊரக வேலைவாய்ப்பு (VB-G RAM) சட்டத்தை வலுக்கட்டாயமாக நிறைவேற்றி, முந்தைய திட்டத்தில் (MGNREGA) உறுதியளித்த அரசியலமைப்புச் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு உரிமையையும், சட்டப்பூர்வ ஊதிய உயர்வு உரிமையையும் பறித்து விட்டதாக காங்கிரஸ் கடும் கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* “தேர்தல் ஜனநாயகத்தை நசுக்க துடிக்கும் அரசு” – ஆட்சி மாற்றத்துக்கு பிரசாந்த் பூஷன் அழைப்பு! “தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றவே நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்; காட்டுமிராண்டித்தனம் தொடர்ந்தால் ஆட்சி மாற்றம் நிச்சயம்” எனப் பிரசாந்த் பூஷன் தெரிவித்தார். “ஆட்சி மாற்றம் கோருவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை; அரசுக்கு எதிரான அதிருப்தியை உருவாக்குவது குற்றமல்ல” என்றும் அவர் கூறினார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *