திருச்சி, செப்.2- பள்ளிப் பருவத் திலேயே தன் கற்பனைச் சிறகுகளால் எழுத்து வானில் புதிய தடம்பதித்துள்ளார் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் பிரிவு மாணவர் பி. ஆதில் சமி.
இவர் ஆங்கிலத்தில் வடித்த ‘தி கான்ச் ஆஃப் தி நார்த் – பகுதி 1’ (The Conch of the North Part-I) என்ற நாவல் தற்போது வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நூலின் சிறப்பு: புத்தகப் பக்கங் களுக்குள் வாசகர்களைக் கட்டிப்போடும் மர்மமும், விடைதேடத் தூண்டும் விறுவிறுப்பும், கற்பனை உலகை கண்முன் நிறுத்தும் பாணியுமே இந்நூலின் மய்யக்கரு. பாடப் புத்தகங்களின் எல்லை களைத் தாண்டி, சமகாலப் புனைகதை உலகிற்கு ஏற்ற நேர்த்தியான நடையோடு ஒரு பெரும் கற்பனைப் பயணத்தை தன் முதல் நூலிலேயே வெற்றிகரமாகத் தொடங்கி வைத்துள்ளார் பி.ஆதில் சமி.
படைப்பூக்கமும், தேடலும் கொண்ட இத்தகைய மாணவர்கள் கல்வி நிறுவனங் களின் அடையாளங்கள் மட்டுமல்ல; நாளைய இலக்கியப் பரப்பின் நம்பிக்கை நட்சத்திரங்கள். தடம் மாறாத வாசிப்பும் தளராத கற்பனை வளமும் இவரை இளம் எழுத்தாளராக உயர்த்தியுள்ளது.
புதியதோர் உலகைத் தன் எழுத்துகளால் செதுக்கியுள்ள மாணவர் பி.ஆதில் சமியின் இந்த ஆக்கப்பூர்வ முயற்சிக்கு பள்ளி நிர்வாகமும் ஆசிரியப் பெருமக்களும் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளனர்.
