சதுரங்கக் களத்தில் சரித்திரம் படைத்த பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் சிறுவர்கள் மண்டலப் போட்டிகளில் ஜொலித்த மாணவர்களின் பெருமைமிகு வெற்றி!

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சிராப்பள்ளி, ஆக. 1- வெற்றியின் பாதையை நோக்கி ஒவ்வொரு படியாய் எடுத்து வைத்த பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிச் சிறார்களின் விடாமுயற்சிக்கு மேலும் ஒரு மகுடமாக இந்தச் சாதனை அமைந்தது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நடைபெற்ற மண்டல அளவிலான சதுரங்கப் போட்டி களில், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் அசாத்திய மூளைத் திறனையும் கூர்மையான உத்திகளையும் வெளிப்படுத்திப் பல பரிசுகளைக் குவித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

புத்தி கூர்மைக்கான இந்தப் போர்க்களத்தில், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு வயதுப் பிரிவுகளில் தங்களது திறமையை முழுமையாக வெளிப்படுத்தினர். குறிப்பாக, மூன்றாம் வகுப்புப் பயின்ற இளம் தளபதி முகம்மது அனுஃப் தனது பிரிவில் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்தப் பள்ளியையும் நிமிர்ந்து பார்க்க வைத்தார். அவரைத் தொடர்ந்து, போட்டிகளில் களமிறங்கிய அன்புச் செல்வங்கள் தீபிகா தி.ரா., ஹிரித்திக் ஜெ., நந்தினி எல்., பாதில் ஹபீஸ் எஸ்.எம்., லட்சணா எஸ்., ஏஞ்சலினா கிறிஸ்டி ஏ., கீர்த்தனா, பிரதீப் குமார் கே. மற்றும் ஜாஸ்மின் பி. ஆகியோர் இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஆறாம் இடங்களைப் பிடித்து அசத்தினர்.

இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை முத்தமிட்டு வெற்றி வாகை சூடிய திறமைமிகு மாணவ-மாணவிகள், அடுத்து நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி களில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் மண்டலத்தின் சார்பாகப் பங்கேற்க முழுத் தகுதியைப் பெற்றனர் என்பது அனைவருக்குள்ளும் அளவற்ற பெருமிதத்தை ஏற்படுத்தியது.

மாணவர்களின் இந்தத் தொடர் வெற்றிக்குப் பின்னால் இருந்த அயராத உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அனைவரும் மனதாரப் போற்றினர். அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்கிப் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கோகுல் மற்றும் சவும்யா ஆகியோ ரின் முயற்சியும், சதுரங்கப் பயிற்சி ஆசிரியர் இலக்கியப் பிரியா  அவர் களின் பயிற்சியும் இத்தருணத்தில் நன்றியு டன் நினைவு கூரப்பட்டது.

வெற்றிப் பாதையில் நடைபோட்ட மாணவ-மாணவிகளையும், அவர்களைச் செதுக்கிய ஆசிரியர்களையும் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும் தங்களது அன்பையும் பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொண்ட துடன், வரவிருக்கும் மாவட்டப் போட்டிகளிலும் இதே போன்ற தொரு பொன்னான வெற்றியைச் சூடி வர மனதார வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *