டில்லியில் இளைஞர் போராட்டத்தின் போது அம்பலமான போலி காவல்துறை சீருடை சர்ச்சை: பெயர் அட்டைகளில் வெளிப்பட்ட முறைகேடுகள்!

- Advertisement -

டில்லியில் அமைதியான முறை யில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தின் மீது காவல்துறை நடத்திய நடவடிக்கைகள் மற்றும் வன்முறை நிகழ்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களையும் தலைவர்களையும் தாக்குவதற்காக, ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நபர்களைக் காவல்துறை சீருடை அணிவித்து களமிறக்கியதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், காவலர்களின் சீருடைகளில் முறையான பெயர் பட்டைகள் (Name Badges) மற்றும் அடையாள எண்கள் இல்லாதது குறித்து ஏற்கெனவே பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், காவல்துறை சீருடை அணிந்த ஒரு பெண் காவலர் இரண்டு நாட்களாக வெவ்வேறு பெயர்களுடனும், காவல் துறைக்குத் தொடர்பில்லாத வேறு துறைகளின் பதவிகளுடனும் சீருடை அணிந்து வந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெயர் பட்டைகளில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்

முதல் நாள் சீருடை விவரம்: போராட்டத்தில் களமிறக்கப்பட்ட அந்தப் பெண்மணி முதல் நாள் அணிந்திருந்த பெயர் பட்டையில் “ஒக்மாரா கவுரீ” என்ற பெயருடன், காவல்துறை பதவிக்கு பதிலாக விமானப் பணிப்பெண்களுக்கான “கேபின் க்ரோ” (Cabin Crew) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்த நாள் அவர் அணிந்திருந்த பெயர் பட்டையில் “சுவேதா குமாரி” என்றும், அதன் கீழ் “மேற்பார்வை பொறியாளர்” (Supervisor Engineer) என்றும் அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அந்தச் சீருடையில் இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட தோள்பட்டை பேட்ஜும் (Shoulder Badge) இடம்பெற்றிருந்தது.

அம்பலமான உண்மை

காவல்துறையின் மிக முக்கியப் பணியான சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும், போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் சமூக விரோதிகளையும் வெளிநபர்களையும் காக்கிச் சீருடை அணிவித்து காவல்துறை அனுமதித்துள்ளதாக இதன் மூலம் தெரியவருகிறது. கையில் கிடைத்த எந்தவொரு பெயர் பட்டையையும் அவசரமாக மாட்டிக்கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடச் சொன்னதன் விளைவாகவே, விமானப் பணிப்பெண் மற்றும் பொறியாளர் பெயர் பட்டைகள் காவல்துறை சீருடையில் இடம்பெற்றுள்ள இந்த முறைகேடு தற்போது அம்பலமாகியுள்ளது.

டில்லி காவல்துறை சீருடையின் நம்பகத்தன்மையைச் கேள்விக்குள்ளாக்கியுள்ள இந்த நிகழ்வு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையே நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தும் மோசமான ஒரு நடவடிக்கையை டில்லியில் சோதனை செய்து பார்த்திருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சில்லரை அமைப்புகள் லத்தியால் தாக்கும் பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சி போன்ற வன்முறைப் பயிற்சிகள் அளித்து வந்தது. போராட்டத்தின் போது காவல்துறை வேடத்தில் சென்று போராட்டக்காரர்களை தாக்குவதற்குத்தான் என்பது தொடர்ச்சியாக வெளிவரும் காணொலிகள் மூலம் அம்பலமாகி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *