சிறுபான்மையினர் ஆணையத்தில் 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் புகார்கள் பதிவு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக. 3 முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியாவின் சிறுபான்மை சமூகங்கள் சார்பில் 2021-2022 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 9,550-க்கும் மேற்பட்ட புகார்களை தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

5 ஆண்டுகளில் அதிகளவு புகார்களை முஸ்லிம்கள் பதிவு செய்துள்ளனர். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் நாடு முழுவதுமிருந்து அளிக்கப்பட்ட மொத்தம் 9,557 புகார்களில், 2,059 புகார்கள் சட்டம் ஒழுங்கு தொடர்பானதும், 1,031 புகார்கள் நிலத்தகராறுகள் தொடர்பானதுமாக இருந்தன.

ஆச்சரியமளிக்கும் விதமாக, வகுப்புவாத வன்முறை தொடர்பாக 31 புகார்களும், வெறுப்புக் குற்றங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக 97 புகார்களும் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் பகிரப்பட்ட, சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2021-2022 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 6,145 புகார்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக, சீக்கியர்கள் 1,222 புகார்களும் கிறிஸ்தவர்கள் 644 புகார்களும் பதிவு செய்துள்ளனர். இதில் கல்வி, சட்ட ஒழுங்கு, நில விவகாரம், மத உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் பல விசயங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.

மொத்த மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அதிகபட்சமாக 3,484 புகார்கள் உத்தரப் பிரதேச மாவட்டத்தில் இருந்து முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், பார்சிகள், ஜைனர்கள் போன்ற பல்வேறு சமூகத்தினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த இடங்களில் டில்லியில் 1,140, மகாராட்டிரத்தில் 690, பஞ்சாபில் 512, தெலங் கானவில் 392, மத்தியப் பிரதேசத்தில் 381, அரியா னாவில் 324 மற்றும் பீகாரில் 301 புகார்களும் பெறப்பட்டுள்ளனர். மீதமுள்ள புகார்கள் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்துள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *