லெ.அ.சி.லீலாவதி அம்மையார் உடலுக்கு – கழகப் பொதுச்செயலாளர் மாலை வைத்து இறுதி மரியாதை!

1 Min Read
- Advertisement -

இலால்குடி மாவட்டம் – பெருவளப்பூர் அரசியல் சட்ட எரிப்பு வீரர் மறைந்த லெ.அ.சிதம்பரம் அவர்களின் இணையரும், புள்ளம்பாடி ஒன்றிய கழக செயலாளர் சி.வீரமணியின் தாயாருமான லெ.அ.சி.லீலாவதி அவர்கள் 13.10.2026 அன்று மறைந்தார். இவ்விணையர்கள் ஜாதி – மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மறைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மறைவுற்ற அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன்: பா.ஆல்பர்ட் (மாவட்டக் காப்பாளர்), ஆ.அங்கமுத்து (மாவட்டச் செயலாளர்), வெ.சித்தார்த்தன் (மாவட்டத் துணைச் செயலாளர்), மு.திருநாவுக்கரசு (மாவட்டத் துணைத் தலைவர்), சா.இசைவாணன் (மாவட்ட இணைஞரணித் தலைவர்), ஆ.வான்முடிவள்ளல் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்), சா.பன்னீர்செல்வம் (புள்ளம்பாடி ஒன்றிய அமைப்பாளர்), சி.பிச்சைமணி (இலால்குடி ஒன்றியத் தலைவர்), க.ஆசைத்தம்பி (இலால்குடி மாவட்ட துணைத் தலைவர்), சி.பொற்செழியன் (புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *