இலால்குடி மாவட்டம் – பெருவளப்பூர் அரசியல் சட்ட எரிப்பு வீரர் மறைந்த லெ.அ.சிதம்பரம் அவர்களின் இணையரும், புள்ளம்பாடி ஒன்றிய கழக செயலாளர் சி.வீரமணியின் தாயாருமான லெ.அ.சி.லீலாவதி அவர்கள் 13.10.2026 அன்று மறைந்தார். இவ்விணையர்கள் ஜாதி – மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மறைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, மறைவுற்ற அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன்: பா.ஆல்பர்ட் (மாவட்டக் காப்பாளர்), ஆ.அங்கமுத்து (மாவட்டச் செயலாளர்), வெ.சித்தார்த்தன் (மாவட்டத் துணைச் செயலாளர்), மு.திருநாவுக்கரசு (மாவட்டத் துணைத் தலைவர்), சா.இசைவாணன் (மாவட்ட இணைஞரணித் தலைவர்), ஆ.வான்முடிவள்ளல் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்), சா.பன்னீர்செல்வம் (புள்ளம்பாடி ஒன்றிய அமைப்பாளர்), சி.பிச்சைமணி (இலால்குடி ஒன்றியத் தலைவர்), க.ஆசைத்தம்பி (இலால்குடி மாவட்ட துணைத் தலைவர்), சி.பொற்செழியன் (புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர்).
