திருச்சி, அக்.15- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் அய்ந்தாம் வகுப்பு பயிலும் மாணவர் எஸ்.நகுலேஷ், ஸ்டெம் ஸ்மார்ட் என்லிவன் மெமரி நிறுவனம் நடத்திய 7-ஆம் பன்னாட்டு அபாகஸ் மற்றும் ஸ்பீட் மேத்ஸ் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.
பன்னாட்டு அளவில் நடைபெற்ற இக்கணிதத் திறனுக்கான போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் தீவிரமாகப் பங்கேற்றுத் திறமைகளை வெளிப்படுத்தினர். இச்சூழலில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அய்ந்தாம் வகுப்பு மாணவர் நகுலேஷ் தனது அசாத்திய திறமையையும் கணக்கீட்டு வேகத்தையும் வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்துப் பள்ளியின் புகழை உலக அளவில் உயர்த்தியுள்ளார்.
பன்னாட்டு அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு கணிதத் துறையில் முத்திரை பதித்த மாணவர் எஸ். நகுலேஷை பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் மனதாரப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
