ஜந்தர் மந்தரில் நுழைந்த சிஜேபி நிர்வாகிகளுக்கு அய்ந்து நாள் நீதிமன்றக் காவல் டில்லி நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக். 15– டில்லி ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் கைதான சிஜேபி நிர்வாகிகளை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி (எஸ்அய்ஆர்) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில், டில்லியில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டத்துக்கு அனுமதி மறுத்த டில்லி காவல் துறை, ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடத்துவதற்கான களப் பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், சிஜேபி முன்னணி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே ஆகியோர் ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்களைத் தாண்டி உள்ளே நுழைய முற்பட்டனர். கையில் தேசியக் கொடியுடன் ஜந்தர் மந்தரில் நுழைந்த அவர்களை டில்லி காவல் துறையினர் கைது செய்து, பின்னர் டில்லி சிறப்பு நிர்வாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து, அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேநேரம் அஜிங்கியா ஷிண்டேவை ரூ.5 ஆயிரம் பிணைத் தொகையுடன், அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவித்தது.

முன்னதாக, கடந்த 10ஆம் தேதி மும்பையில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டில்லி வந்த அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நிர்வாக நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும், நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை பாயும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *