முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை!

0 Min Read
- Advertisement -

திருச்சி, அக்.15- தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2026’ மாவட்ட அளவிலான போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

இப்போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பதினோராம் வகுப்பு மாணவி எஸ்.பி.ரிதன்யா, உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாவட்ட அளவில் சிறந்து விளங்கிப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ள மாணவியின் இந்தச் சாதனைக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர்,ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *