மாவட்ட சிலம்பாட்ட வாகையர் போட்டியில் இரட்டைப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி!

சிறப்பு புத்தக சலுகைகள்

திருச்சி, ஆக.13- மாவட்ட சிலம்பாட்ட வாகையர் போட்டியில் இரட்டைப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்த திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிக்குப் பாராட்டுகள் குவிந்தன.

திருச்சிராப்பள்ளி மாவட்ட சிலம்பாட்ட சங்கம் சார்பில், கடந்த 2026 ஜூலை 25 அன்று மணப்பாறையில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டம் வாகையர் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டன.

இப்போட்டியில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி என்.ஹரிவர்ஷா, தனது அசாத்திய திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி சிறப்பான வெற்றிகளைக் குவித்துள்ளார்.

பதக்க விவரங்கள்:

வெள்ளிப் பதக்கம்: தனிநபர் சண்டைப்போட்டிப் பிரிவில் 59.1 முதல் 62 கிலோ எடைப் பிரிவுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

வெண்கலப் பதக்கம்:

இத்தொடரில் தனது தொடர் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

மாவட்ட அளவில் நடைபெற்ற இத்தகு பெருமைமிகு சிலம்பப் போட்டிகளில் கலந்துகொண்டு இரட்டைப் பதக்கங்களை வென்று, பள்ளிக்குப் பெருமை தேடித்தந்த மாணவி என்.ஹரிவர்ஷாவை  பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள்  அனைவரும் மனதாரப் பாராட்டித் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *