வெட்டிக்காடு, ஏப்.12– நமது வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசின் வேண்டுகோளுக்கிணங்க தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பானது பள்ளிக்கு அருகாமையில் உள்ள திருவோணம் மற்றும் ஊரணிபுரம் சாலைகளில் நடத்தப்பட்டது. பல்வேறு விளம்பர பலகைகளுடன் முழக்கங்கள் எழுப்பிய வண்ணம் அணிவகுப்பு நடத்தினர் . பொதுமக்கள் அனைவரும் நின்று கவனித்து பள்ளியின் பெயரை அறிந்து கொண்டது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு உற்சாகமூட்டினர். பள்ளி ஆசிரிய பெருமக்கள், முதல்வர் மற்றும் சிலம்பம் ஆசிரியர் உட்பட பங்கு பெற்று அணிவகுப்பை சிறப்பித்தனர்.

விளம்பர பலகையின் வாசகங்கள்
Your vote your voice , Vote for Honesty not for Sale , Your Vote Shapes the Nation. Your Duty -Your Vote Don’t Miss It.
100 சதவீதம் வாக்களிப்பு, உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல, வாக்களிப்பு நமது பொறுப்பு, வாக்களிக்க தவறாதீர், உங்கள் வாக்கு உங்கள் உரிமை.

