மும்பை, அக்.14- ‘‘மதம் மாற்றச் சொல்லி வற்புறுத்துவது மத நம்பிக்கையை அவமதிப் பது ஆகாது’’ என்று கூறிய உயர்நதிமன்றம் நாக்பூர் கிளை குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதான வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
மராட்டிய மாநிலம், அமரா வதியை சேர்ந்த ஜோசப் குடாவந்த், அவரது மகன் விக்டர் குடாவந்த், மருமக்கள் எல்வினா குடாவந்த் மற்றும் சமூக ஆர்வலர் ஆனந்த் மங்கர் ஆகியோர் அந்தப்பகுதியை சேர்ந்தொரு இணையர் களை மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல் துறையினர் சம்பந்தப்பட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் குற்றம் சாட்டப் பட்ட 4 பேரும் தங்கள் மீதான வழக்கு மற்றும் குற்றப் பத்திரிகையை ரத்து செய்யமாறு மும்பை உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சந்த் வானி முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது.
அப்போது அரசுதரப்பு வழக் குரைஞர், “இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற ஒப்புக் கொண்டால், புகார்தாரருக்கும் அவரது மனைவிக்கும் மாதந்தோறும் பணம் வழங்குவ தாகவும், குழந்தை களின் கல்விச் செலவுகளை ஏற்பதாகவும், அவர்களுக்கு வீடு கட்டித் தருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மத உணர்வை புண்படுத்தி உள்ளனர்” என்று வாதிட்டார். ஆனால் இந்தியாவின் எந்தவொரு பிரிவினரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் தீய நோக்கம் அவர்களுக்கு இல்லை என்றும், எந்த மதத்தையும் தாங்கள் அவமதிக்கவில்லை என் றும் குற்றம் சாட்டப் பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்புவாதங் களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் வழக்குகளில் இருந்து விடுவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், “இந்த வழக்கில் அதிகபட்சமாக, புகார்தாரரையும், அவரது மனைவியையும் கிறித் துவ மதத்திற்கு மாறுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் வற்புறுத் தினார்கள் என்பது மட்டுமே அவர்கள் மீதான குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் மத நம்பிக்கைகளை அவர்கள் புண்படுத்தவில்லை. ஒருவரை மதமாற்றம் செய்ய வலியுறுத்துவது எந்தவொரு பிரிவினரின் மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஆகாது” என்று குறிப்பிட்டடார்.
மத சுதந்திரத்தைப் பாதுகாப்ப தற்கும், ஒரு மதத்தில் இருந்து மற் றொரு மதத்திற்கு சட்ட விரோதமாக மதமாற்றம் செய்வதை தடை செய்வதற்கும் மராட்டிய அரசு கொண்டு வந்த சட்டம் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதியில் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
