பிரதமர் மோடியை வரவேற்க.. காவி உடையில் திருவள்ளுவர்! வாய் திறக்காத தவெக!

1 Min Read

சென்னை, அக். 12– பிரதமர் நரேந்திர மோடி நேற்று (11.10.2026) சென்னை வந்தபோது, அவரை வரவேற்க காவி உடையில் திருவள்ளுவர் சிலையை பாஜகவினர் வைத்திருக்கின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்திருக்கிறார். இதற்காக சென்னை வந்த அவரை பாஜகவினர் போட்டிப்போட்டுக்கொண்டு வரவேற்றிருக்கின்றனர். குறிப்பாக சென்னை போரூரில் காவி நிற உடையில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழர்களை பொறுத்தவரை திருவள்ளுவர் என்பவர் வெள்ளை உடை அணிந்து, சாந்தமாக இருப்பவர். காலங்காலமாக திருவள்ளுவரை நாம் இப்படித்தான் பார்த்து வருகிறோம்.

இதையெல்லாம் பார்த்த தமிழ்நாடு அரசு, திருவள்ளுவர் உலக மக்கள் அனைவருக்குமானதாக திருக்குறளை எழுதியிருக்கிறார். எனவே அவரை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடைக்க கூடாது என வெள்ளை உடை உடுத்தி திருவள்ளுவரின் பொதுமைத் தன்மையை வெளிப்படுத்தியது.

இப்படி இருக்கையில் பாஜகவினர் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் பாஜகவினரின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று திருவள்ளுவருக்கு வெளிப்படையாக காவி உடை உடுத்தப் பட்டிருக்கிறது. இதைப்பற்றி தவெக அரசு பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை என்பது கடுமையான குற்றமே!

குறிப்பாக திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “பெரியார் மற்றும் அம்பேத்கரை கொள்கைத் தலைவராக கொண்டுள்ள விஜய் மற்றும் அமைச்சர்கள் இதைப்பற்றி பேச வாய்ப்பில்லை. அவர்களுக்கு தெரிந்த ஒரே மந்திரம்: திமுக, திமுக, திமுக..” என்று விமர்சித்திருக்கின்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *