மீனாட்சியம்மன்மீது நம்பிக்கை இல்லையோ? கோயில் சார்பில் ரூ.5 கோடியில் விபத்துக் குழு காப்பீடாம்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

மதுரை, செப்.12-– உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் பாது
காப்பைக் கருத்தில்கொண்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மொத்தமாக ரூ.5 கோடியில் விபத்து குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலின் குட முழுக்கு விழா செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெ றவுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழாநிகழ்வு நடைபெ றுவதால், விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதையொட்டி கோயில் மேல்தளம், பொற்றாம ரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம் மற்றும் ஆடி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், உபயதாரர்களுக்கு 4,000 அனுமதி சீட்டுகளும், முக்கியதாரர்கள் (வி.அய்.பிக்கள்) மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில் 5,000 அனுமதி சீட்டுகளும் வழங்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்ப டுத்தவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கியூஆர் கோடு வசதியுடன் கூடிய ‘ஹாலோ கிராம்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஏழு வண்ணங் களிலான பிரத்யேக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

இத்தகைய மாபெரும் விழாவில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தும் வகையில், கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான விபத்துக் குழு காப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *