நாக்பூர், அக். 12- எந்த பிணை பத்திரத்திலும் கையெழுத்து இடவில்லை, மீண்டும் வீதியில் இறங்கி போராடுவோம் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திக்கே ஆவேசமாக பேசியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தமும்பையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்ற ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜித்திக்கே நேற்று முன்தினம் (10.10.2026) விமானத்தில் வைத்தே காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
நேற்று அவர் காவலில் இருந்து பல்வேறு கடுமையான நிபந்தனைக ளுடன் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அபிஜித் திக்கே, நேற்று (11.10.2026) நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “நானோ அல்லது மற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர்களோ மீண்டும் போராட மாட்டோம் என்று எந்தவொரு பிணை பத்திரத்திலும் கையெழுத்திடவில்லை. நாங்கள் மீண்டும் வீதியில் இறங்கி போராடு வோம். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். என்னை நூறு முறை வேண்டுமானாலும் சிறையில் அடையுங்கள், உங்களது சர்வாதிகாரத்திற்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை.
காவலில் நான் இருந்த போது எனது பாட்டி இறந்த தகவலை டில்லி காவல் துறயினர் கூறியதாக காட்சிப் பதிவு வெளியிட்டுள்ளனர். ஆனால், என் கிராமத்தில் உள்ள உறவினரை தொடர்பு கொள்ள எனது கைப்பேசியை காவல் துறையினர் 2 நிமிடங்கள் தருமாறு நான் கெஞ்சியும் அவர்கள் தர மறுத்து விட்டனர்.
அதுமட்டுமின்றி, எனது பாட்டி மறைவால் ஏற்ெகனவே சோகத்தில் இருந்த எனது பெற்றோருக்கு நள்ளிரவு 3.30 மணிக்கு கைப்பேசி தொடர்பு கொண்டு ‘உங்க மகன் கெத்தாகிவிட்டான்’ என்று கூறச் சொல்லி டில்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்தி உள்ளனர். பகலில் கூறாமல், நள்ளிரவில் எனது பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்திட்ட இவர்களிடம் மனிதாபிமானமே இல்லை. டில்லி காவல்துறையினர் சீருடை அணிந்தகுண்டர்கள். அமித்ஷாத்தான் இவர்களை இப்படி குண்டர்களாக மாற்றியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். விவேக பகத் போன்ற அதிகாரிகளுக்கு கூடுதல் துணை ஆணையராகப் பதவி உயர்வு கிடைக்கிறது. நாட்டை குண்டர்கள் ஆளும்போது, குண்டர்களுக்குத்தான் பதவி உயர்வு கிடைக்கும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
