திருவள்ளூரில் நடைபெற்ற பெரியார் 148 நடை-ஓட்டம்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருவள்ளூர், அக். 7- திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் 148 நடை ஓட்டம், 27.09.2026 அன்று காலை 6 மணியளவில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத் தலைவர் மா.மணி தலைமை தாங்கினார். ஆவடி மாவட்டக் கழகத் தலைவர் கார்வேந்தன் நடை ஓட் டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நடை ஓட்டம் காக்களூர் ஏரி அருகில் தொடங்கி, காக்களூர் மாற்றுச் சாலை வழியாக சென்று, திருவள் ளூர் காமராஜர் சிலை அருகில் நிறைவு பெற்றது.

நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கோ. கிருஷ்ணமூர்த்தி, ஆவடி மாவட்டச் செயலாளர் இளவரசன், கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடை – ஓட்டத்தின் நிறைவில் கும்மிடிப்பூண்டி மாவட்டக் கழகத் தலைவர் புழல் ஆனந்தன் நன்றியுரை ஆற்றினார்.

சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நடை ஓட்டத்தில் கழகத் தோழர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *