தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து கருப்புக் கொடியை ஏற்றுவீர்! கருப்புடை அணிவீர் என்று திராவிட மாடல் அரசின் நாயகர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி தமிழ்நாடே கருப்புக் காடாகக் காட்சி அளித்தது.
நாடாளுமன்றத்தில் கருப்புச் சட்டை அணிந்து தி.மு.க. உறுப்பினர்கள் “வெடி முழக்கம்” செய்தனர்.
கருப்பு என்றால் ஏளனமாகப் பேசுகிறார்கள். ஆன்மிகத்தைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் காவி கூட்டத்திற்கு ஒன்று தெரியுமா?
கிருஷ்ணன் (கடவுள்) என்றால் அதன் பொருள் கருப்பன் என்பதே!
ராமனைப் பற்றிக் கூறும்போதும் கருப்புக் கலந்த நீல நிறத்தவன் (நீல மேக ச் யாமனம்) என்று தானே சொல்லப்பட்டிருக்கிறது – இதற்கு என்ன பதில்?

