விலைவாசியின் உச்சத்தில் தமிழ்நாடு ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரிப்பு!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 7- தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு மாதமாக அரிசி, பருப்பு விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்து உள்ளது.

தமிழ்நாட்டில் சன்ன ரக அரிசி உற்பத்தி போதுமான அளவில் இல்லை. ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா, மேற்கு வங்காளம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, சன்ன ரக நெல் அதிகளவில் தமிழ்நாட்டிற்கு வருகிறது. இங்குள்ள அரிசி ஆலைகள் வாயிலாக அது கொள்முதல் செய்யப்பட்டு, அரிசியாக்கி விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூர் தேவைக்கு போக வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடு களுக்கும் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் அரிசி தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால், அரிசி விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. விரைவில் ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு விற்கப்பட வாய்ப்புள்ளதாக அரிசி ஆலைகள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே, வெளிமாநிலங்களில் இருந்து நெல் கொள்முதலை அதிகரித்து அரிசி ஆலைகளில் சேமித்து வைக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நெல் மூட்டைகளை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், காவல் துறையினரின் துணையுடன் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கணிசமாக உயரும் என நெல் வியாபாரிகள், கமிஷன் ஏஜென்டுகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட டீலக்ஸ் பொன்னி தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி அரிசி ரூ.1,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,900-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை பொன்னி அரிசி ரூ.2,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி அரிசி ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சரிசி ரூ.1,800-க்கு விற்பனை செய் யப்படுகிறது. அதேபோன்று 25 கிலோ எடை கொண்ட சிவாஜி பொன்னி அரிசி ரூ.1,800-ல் இருந்து ரூ.2,400 ஆக உயர்ந்துள்ளது. 30 கிலோ எடை கொண்ட பாஸ்மதி அரிசி ரூ.3,300இல் இருந்து ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்து உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *