பெரியார் மணியம்மை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

1 Min Read

திருச்சி, ஜூன் 28- திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இன்று (28.06.2026) காலை 7.30 மணியளவில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை துவக்கி வைத்து சிறப்பித்தார். பெரியார் மணியம்மை மருத்துவ மனையின் மருத்துவ அலு வலர் மரு. முனவர் சுல்தானா தலைமையில் நடைபெற்ற இம்முகாமிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் துறைத் தலைவர்கள் பேரா. உமாதேவி, முனைவர் கற்பகம் குமர சுந்தரி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. தினேஷ் மற்றும் பேரா சேதுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப் பித்தனர்.

இம்முகாமில் திருச்சி சுந்தர் நகர், கருணாநிதி நகர் நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள 163 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இம் முகாமிற்கான ஏற்பாடுகளை சுப்ரமணியபுரம் அரசு ஆரம்ப சுகாதார மய்யம், பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டக் குழுவினர் மற்றும் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *