வல்லம், செப்.30- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் IE(I) சார்பில் மாநில அளவிலான விருது இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு கொல்கத்தா வில் தொடங்கப்பட்டு தலைமை யிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய அமைப்பான இந்திய பொறியாளர் கூட்டமைப்பு Institution of Engineers (India) IE(I) சார்பில் 19.09.2026 அன்று 59வது பொறியாளர் தினம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தியப் பொறியாளர் கூட்டமைப்பின் IE(I) சிறப்பான செயல்பாடுகள், தொழில் நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதன் மூலம் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் இக்கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டும் விதமாக, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு “சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அத்தியாய விருது 2026” (Best IE(I) Students Chapter Award – 2026) இவ்விருதினை இந்தியப் பொறியாளர் கூட்டமைப்பு IE(I) தலைவர் முனைவர் பி.முரளிதர், FIE மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ்குமார் வழங்க இக்கல்லூரியின் மின்னணு வியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் இரா.சந்திர சேகரன் மற்றும் அமைப்பியல் துறைத்தலைவர் சு.கார்த்திக் ஆகியோர் இக்கல்லூரியின் சார்பாக பெற்றுக் கொண்டனர். இவ்விருதினை பெற உறுதுணை யாக இருந்த அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை இக்கல்லூரியின் முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி மற்றும் துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா அவர்கள் ஆகியோர் பாராட்டினர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்தியப் பொறியாளர் கூட்டமைப்பின் IE(I) சார்பில் மாநில அளவிலான விருது 2026
Leave a Comment
