தஞ்சாவூர், ஆக. 30– பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) தஞ்சாவூர், ரெடிங்டன் அறக் கட்டளையின் சிஎஸ்ஆர் முயற்சியான ரெடிங்டன் அறக் கட்டளை மற்றும் அய்.சி.டி.அகாடமி ஆகியவற்றுடன் இணைந்து மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மறு தொடக்கம் பயிற்சித் திட்டம் 28.8.2026 அன்று பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தொடக்கபெற்றது.
இப்பயிற்சி மாணவர்களுக்கு தொழில் துறைக்கு ஏற்ற தொழில்நுட்பத் திறன்களை வழங்கி வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பக் துறைகளில் அவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துறையைச் சார்ந்த 60 மாணவர்கள் இப்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுடன் தொடங்கபெற்றது. மேலும் இறுதியாண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவி சி.கீர்த்தனா வரவேற்புரையாற்றி நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.
பல்கலைக்கழக துணைத் தலைவர் டாக்டர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமை உரை யாற்றினார். அவர் தமது உரையில் தொழில்துறையின் தேவைக்கேற்ப திறன்களை வளர்த்துக் கொள்வதன் முக்கியத் துவத்தை எடுத்துரைத்தார். சி.எஸ்.ஆர். மற்றும் கல்வி தொழில்துறை கூட்டுமுயற்சிகள் மூலம் வழங்கப்படும் இத்தகைய பயிற்சி வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அய்.சி.டி. அகாடமி தமிழ்நாடு கல்வி முன்முயற்சிகள் மற்றும் மாநிலத் தலைவர், துணைப் பொது மேலாளர்.வி.பூர்ணபிரகாஷ் தொடக்க உரையாற்றினார். கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிற மேம்பட்ட தகவல் தொழில்நுட்பத் திறன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதை அவர் எடுத்துரைத்தார். மாணவர்கள் விழிப்புணர்வு மறுதொடக்கம் பயிற்சித் திட்டத்தில் ஆர்வத்துடன் பங் கேற்று தங்களது தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை திறன்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
விழிப்புணர்வு மறுதொடக்கம் பயிற்சித் திட்டம், மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வலுப்படுத் துவதுடன் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 60 கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் பங்கேற்பது வகுப்பறைக் கல்வியுடன் இணைந்த தொழில் துறையை மையமாகக் கொண்ட கற்றல் வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்குவதில் பல்கலைக்கழகம் கொண்டுள்ள உறுதிபாட்டை வெளிப்படுத்துகிறது.
இந்நிகழ்வு ரெடிங்டன் அறக்கட்டளை மற்றும் அய்.சி.டி அகாடமி ஆகிய நிறுவனங்களின் ஒருகிணைந்த முயற்சியின் மூலம் மாணவர்களுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்கும் மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி சி.எஸ்.ஆர் முயற்சியின் தொடக்கத் தையும் குறிக்கிறது.
இறுதியாக இறுதியாண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவி ஆர்.கிருத்திகா நன்றியுரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் ரெடிங்டன் அறக்கட்டளை மற்றும் அய்.சி.டி அகாடமி நிறுவன நிர்வாகம் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பங்கேற்பிற்கு நன்றி யினை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா. ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவர் பேரா. ஆர்.பூங்குழலி, மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறைத் தலைவர் பேரா. எஸ்.ராஜநந்தினி மற்றும் அய்.சி.டி.அகாடமி ஒருங்கிணைப்பாளர் பேரா. பி.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் தொழில்துறைக்கு ஏற்ற திறன் களைப் பெற்று தங்களது தொழில் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கிய ரெடிங்டன் அறக்கட்டளை மற்றும் அய்.சி.டி அகாடமி நிறுவனங்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
