எழுத்துகளின் பேரணி… வார்த்தைகளின் கொண்டாட்டம்! திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் வாசிப்பு மன்றத்தின் புதுமைப் புரட்சி!

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருச்சி, செப்.9- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் வாசிப்பு மன்றத்தின் சார்பில் 31.08.2026 (திங்கள்) காலை 10.00 மணியளவில், புத்தகங்களை மட்டும் பார்த்துப் படிக்கும் பழமைக்காலக் கற்றல் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, விளையாட்டு வழியில் தமிழை நெஞ்சில் பதிய வைக்கும் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளனர் 1 மற்றும் 2-ஆம் வகுப்பு குழந்தைகள்.

எழுத்துத் தொடர்வண்டியாய் 1-ஆம் வகுப்பு மாணவர்களின் தொடரோட்டம்!

கைகளில் உயிர் மற்றும் மெய் எழுத்துகள் தாங்கிய அட்டைகளோடு களமிறங்கிய முதல் வகுப்புச் சுட்டிகள், எந்த எழுத்துக்குப் பின் எந்த எழுத்து வரும் என்ற வரிசையைக் கண்டறிந்து, கூச்சலிட்டபடி “புகைவண்டி” போல வட்டத்தைச் சுற்றி வலம் வந்து எழுத்துகளை மனனம் செய்து அசத்தினர்.

நாற்காலி சுழற்சியில்
2-ஆம் வகுப்பு சாதனைகள்!

இரண்டாம் வகுப்பு மாண வர்களோ ஒருபடி மேலே சென்று, வட்டமாக வலம் வந்து தங்களுக்குரிய நாற்காலிகளில் வரிசைப்படி அமர்ந்து வாசிப்புப் பயிற்சியை மேற்கொண்டனர். வீட்டு விலங்கு, காட்டு விலங்கு, பறவைகள் எனப் பிரித்தும், ஈரெழுத்து மற்றும் மூவெழுத்துச் சொற்களைச் சரியான உச்சரிப்போடு உரக்க வாசித்தும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.

வகுப்பறையை வெறும் பாடசாலையாகப் பார்க்காமல், விளையாட்டுக் களமாக மாற்றித் தரும் இத்தகைய செய்முறை வழி கற்றல், குழந்தைகளின் கவனிக்கும் திறனையும் மொழிப் பற்றையும் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியரும், வாசிப்பு மன்றத்தின் பொறுப்பாசிரியருமான  ஏ.ஆர்.திலகவதி மிகத் திறம்பட ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.

பொறுப்பாசிரியர் மற்றும் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்குப் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா, ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்து களைத் தெரிவித்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *