அக்டோபர் 1 முதல் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் 8 சதவீதம் வரை விலை உயர்வு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, செப். 29- அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் ஏசி, டிவி, வாஷிங்மெஷின் உள்பட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களின் விலையும் 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் நம் நாட்டில் பண்டிகை காலம் தொடங்கும் நிலையில் இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

பண்டிகை – விழாக்கள்

இந்த பண்டிகைக் காலங் களில் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்கு புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கு வதும், பணடிகைக் காலத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றாகும்.

ஆனால் இந்த முறை அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை கிடுகிடு வென அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எல்டிஇ டிவி, வாஷிங்மெஷின், ஏசி, ப்ரிட்ஜ் உள்பட பிற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்தபட்சம் 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 8 சதவீதம் வரை உயரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி ஏசியின் விலை 5 முதல் 8 சதவீதம் வரை கம்பெனி களைப் பொறுத்து உயர உள்ளது. எல்இடி டிவி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றின் விலை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது வரை ப்ளூ ஸ்டார், கோத்ரேஜ் அப்ளையன்ஸ், ஹையர், டெய்க்கின், சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் பொருட்களின் விலையை குறைந்த பட்சம் 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன. ‘பானசோனிக்’ நிறுவனம் இன்னும் விலை உயர்வை அறிவிக்காத நிலையில் விரைவில் அதுபற்றி அறிவிக்க உள்ளது.

இந்த விலையேற்றத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. பணவீக்கம் காரணமாக விலை உயர்ந்து வரும் காப்பர், அலுமினியம், ஸ்டீல், போர் சூழலால் உயரும் கச்சா எண்ணெய் உபபொருட்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்வு, அதிகரிக்கும் சரக்குக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று தெரிவிக்கின்றனர்.

இந்த 2026ஆம் ஆண்டில் இதுவரை 2 முறை வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் ஏற்கெனவே உயர்ந்த நிலையில் தற்போது 3ஆவது முறையாக அதிகரிக்க உள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் பல டீலர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் சலுகைகள் வழங்கும்போது அதிகளவில் பொருட்கள் விற்பனையாகும். ஆனால் இந்த முறை விலை உயர்த்தப்பட்டால் தங்களின் விற்பனை பாதிக்கலாம் என்று அச்சமடைந்துள்ளனர்.c

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *