தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக அடுத்த வாரம் விசாரணை : உச்சநீதிமன்றம் அனுமதி

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப். 30- தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கேள்வி எழுப்பும் மனுக்களை, அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு கூட்டு அரசியலமைப்பு அமைப்பாகும். அதன் சட்ட விதிகளின்படி, முடிவுகள் அனைத்தும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும். ஆனால், மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதலின்றி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துள்ளதாக மூத்த வழக்குரைஞர் விகாஸ் சிங் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.

அதே நேரம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (எஸ்.அய்.ஆர்.) போது, சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, இது குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்அய்டி)அமைத்து விசாரிக்க வேண்டும் என வழக்குரைஞர் சைலேந்திர மணி திரிபாதி உள்ளிட்டோரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

விதிகளை மீறிய தன்னிச்சையான செயல்பாடுகளுக்காக தலைமைத் தேர்தல் ஆணையரை இடைநீக்கம் செய்ய வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் இந்த மனுக்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி’ (எஸ்.அய்.ஆர்.) குறித்துக் குறிப்பிட்ட சிங், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களும் ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், இப்பணியை மேற்கொள் ளும் முடிவு உண்மையில் ஆணையத் தின் முடிவுதானா என்பதில் பலத்த சந்தேகம் உள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்த மனுக்களை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிடுமாறு மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் விடுத்த கோரிக்கையை, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் உள்நிர்வாக வெளிப்படைத்தன்மை தற்போது நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *