இரண்டாம் அரையாண்டில் ரூ.7.86 லட்சம் கோடி கடன் பெற ஒன்றிய அரசு முடிவாம்!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப். 26- நடப்பு நிதியாண்டின் (2026-2027) இரண்டாவது பாதியில் ரூ.7.86 லட்சம் கோடி கடன் பெற ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான மொத்தக் கடன் இலக்கில் ரூ.1,20,494 கோடி வரை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நடப்பு 2026-2027 நிதியாண்டில் பத்திரங்கள் மூலம் ரூ.17,20,000 கோடி கடன் பெறப் வரவு செலவுத் திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய கணிப்பின்படி கடனின் அளவு ரூ.15,99,506 கோடியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து, 2026-2027 நிதியாண்டின் இரண்டாம் அரை யாண்டில் ரூ.7,86,000 கோடி கடன் திரட்டத் தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதில் ரூ.15,000 கோடி மதிப்பிலான பசுமைப் பத்திரங்களும் அடங்கும்.

இந்த மாதத்துடன் நிறைவடையும் முதல் அரையாண்டில், வருவாய் இடைவெளியைச் சமாளிக்கப் பத்திரங்கள் மூலம் ரூ.8.13 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது.

இது நிர்ணயிக்கப்பட்ட ரூ.8.2 லட்சம் கோடி இலக்கை விடச் சற்றே குறைவாகும். இரண்டாம் அரை யாண்டிற்கான மொத்த சந்தைக் கடனான ரூ.7,86,000 கோடி, 23 வாராந்திர ஏலங்கள் மூலம் திரட்டப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *