புதுடில்லி, ஆக.14 2026ஆம்ஆண்டுக்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 அன்று தொடங்கியது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தக் கூட்டத் தொடரில் நீட் வினாத்தாள் கசிவு, ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீதான தாக்குதல், ராமன் கோவில் முறைகேடு போன்றவற்றிற்கு விளக்கம் மற்றும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கோரியது.
ஆனால், மோடி அரசு விளக்கம் அளிக்காமல் ஓடி ஒளிந்தது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்களின் கம்பீரமான பேச்சிற்கும், போராட்டத்திற்கும் பயந்து ‘அரசியல் ராஜ தந்திரிகள்’ என்று அழைக்கப்படும் பிரதமர் மோடி,அமித் ஷா நாடாளுமன்றத்திற்கே வரவில்லை. குறிப்பாக, ஒட்டுமொத்தமாக 20 நாள்களும் அவை நேரத்தை மோடி அரசு வீணடித்துள்ளது. மக்கள் பிரச்சினைகள்குறித்து பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் கிளர்ச்சிக்கு இடையே விவாதமின்றி சில மசோதாக்கள் சட்டவிரோதமாக இயற்றப்பட்டது. இந்த அடாவடியால் மக்கள் வரிப்பணம் ரூ.180 கோடிக்கும் மேல் வீணாக்கியுள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு.
