“மேல்நாட்டாரின் அறிவு கடலுக்குள் காற்றின் மேலும் சென்று அதைக் கடந்து அப்பாலும் சூரிய மண்டலங்களிலும் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நம்மவர் நுண்ணிய அறிவு, சாரதா மசோதாவை எதிர்ப்பதிலும், தேவதாசி சட்டத்தை மறுப்பதிலும், பிராமணர்களுக்கு தானதர்மம் செய்து புண்ணியம் சம்பாதிப்பதிலும், காசி ராமேஸ்வர யாத்திரைசெய்து பாவங்களை போக்குவதிலும், செம்பு பித்தளை பொம்மைகளை சிங்காரித்து சாமி என்று பேர் வைத்து அவைகளுக்கு வசந்தோற்சவங்களை செய்துவைப்பதிலும் சென்றுகொண்டிருக்கிறது.”
– என்று ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி (குடிஅரசு, ஏப். 20, 1930) ஏட்டில் எழுதியது. இன்றைக்கும் அப்படியே பொருந்திப்போகிறது.
நூறு வருஷம் ஆகுது… இன்னும் திருந்தலை சார் நீங்க!
– எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் (முகநூல் பதிவிலிருந்து)
